உக்ரைன் அதிபருடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திப்பு

borisjohnson ukrainewar ukpmmeetszelensky weaponsupply boriszelensky
By Swetha Subash Apr 10, 2022 06:46 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்த ரஷ்யா தொடர்ந்து 46-வது நாளாக அந்நாட்டு மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.

போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

உக்ரைன் அதிபருடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திப்பு | Britain Pm Boris Johnson Meets Ukraine President

மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தற்போது வரை தோல்விலேயே முடிந்திருக்கின்றன.

இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. 

உக்ரைன் அதிபருடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திப்பு | Britain Pm Boris Johnson Meets Ukraine President

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

உக்ரைனுக்கு ராணுவ வாகனங்கள், போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க இங்கிலாந்து பிரதமர்  சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் ராணுவ ஆயுதங்கள் இங்கிலாந்தில் இருந்து உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.