பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து.!
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தினசரி பாதிப்புகளும் மரணங்களும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன.
இந்தியாவில் இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தான் இந்த அதி தீவிர பரவலுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் இந்த புதிய வகை வைரஸ் தொடர்பாக அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின அணிவகுப்பிற்கு போரிஸ் ஜான்சன் வருகை தர இருந்தது. ஆனால் அப்போது பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில் போரிஸ் ஜான்சனின் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் தற்போது போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்து செய்யப்படுவதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. மேலும் நிகழ்ச்சிகள் அனைத்தும் இணைய வழியிலே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan