28 நாட்கள் கோமாவில் இருந்த செவிலியரை மீட்டெடுத்த “வயகரா” மருந்து..உயிர் பிழைத்த அதிசய சம்பவம் !

britain woman viagara covid affected wakes from coma
By Swetha Subash Jan 05, 2022 07:31 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

பிரிட்டனில் கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் 28 நாட்கள் கோமாவில் இருந்ததற்கு பிறகு, மருத்துவர்கள் கொடுத்த ‘வயகரா’மருந்தால் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

இங்கிலாந்தின் லிங்கன்ஷயர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான மோனிகா அல்மெய்தா என்ற செவிலியர், மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மோனிகா இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திருந்தபோதும் கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அடிக்கடி சுவாச பிரச்சனை ஏற்பட்டதால், ஐசியூவிற்கு மாற்றப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக, அவருக்கு வயகரா மருந்து அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

வயகரா மருந்து இரத்த ஓட்டத்தை வேகமாக்கும் என்பதால், மோனிகாவிற்கு வயகரா மருந்து தர முடிவு செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து மோனிக்காவுக்கு வயகாரா அளிக்கப்பட்டதும் அவர் கோமாவில் இருந்து மீண்டிருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான மோனிகா, கோமாவில் மீண்டு வந்திருப்பதை நம்ப முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்.

மேலும், பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.