ஒரு மாத ஊரடங்கிற்கு நல்ல பலன்: பிரிட்டன் மக்கள் மகிழ்ச்சி
பிரிட்டனில் கடந்த ஒரு மாதமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு நல்ல பலன் இருப்பாதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பகடந்த ஒரு மாதமாக பிரிட்டனில் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா தீவிரமாக பரவியதால் அடுத்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கடும் நடவடிக்கையினால் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாக பிரிட்டன் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது பிரிட்டன் முழுவதும் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதால் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இதனால் நேற்று முதல் பிரிட்டனில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. வணிக நிறுவனங்கள், கடைகள், பல்பொருள் அங்காடிகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று 13 உயிரிழப்புகள் மட்டும் பதிவாகி இருப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்படுள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமான இளவரசர் பிலிப்பிற்கு இறுதி மரியாதை செலுத்த பிரிட்டன் மக்கள் தயாராகி வருகின்றனர்.