சினிமாவை மிஞ்சும் சம்பவம் - தண்டவாளத்தில் கார் ஓட்டிய நபர்

Britain viralvideo driverhurtlingdownrailwaytracks
By Petchi Avudaiappan Sep 09, 2021 05:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

பிரிட்டன் நாட்டில் வாகன ஓட்டி ஒருவர் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் வீடியோ வைரலாகியுள்ளது.

பிரிட்டனின் டட்டஸ்டன் நகரைச் சேர்ந்த ஆரோன் ஓ ஹல்லோரன் என்பவர் தனது காரை டட்டஸ்டன் நகர ரயில் நிலையத்தின் உள்ளே எடுத்து சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்டன் பகுதியை நோக்கி சுமார் அரை மைல் தூரத்துக்கு தனது காரை தண்டவாளத்தில் இறக்கி ஓட்டியுள்ளார்.

பின்னர் காரை தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அவர் தப்பிசென்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காரை கைப்பற்றிய போலீசார் அதன் உள்ளே இருந்த செல்போன் மூலம் ஆரோனை கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனையும், 156 பவுண்ட் தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு ரயில் சேவை சுமார் 8 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மேலும் ரயில்வே நிர்வாகம் மற்றும் பயணிகளுக்கு 23 ஆயிரம் பவுண்ட் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் வீடியோவை பிரிட்டிஷ் போக்குவரத்து போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.