புதிய வகை கொரோனா உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது
கொரோனா வைரஸின் பரவல் தற்போது வரை வேகம் குறையாமல் இருந்து வருகிறது. அதற்குள்ளாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகள் மீண்டும் பொது முடக்கத்தை அறிவித்தன.
இந்நிலையில் பிரிட்டனில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவுவதாக கண்டறியப்பட்டது.
இந்த வகை கொரோனா முந்தையதை விடவும் மிகவும் தீவிரமாக பரவுவதாக பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது. இதனால் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது இந்தியா உட்பட உலகின் 41 நாடுகளில் புதிய உருமாறிய கொரோனா பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பு மருந்து இந்த புதிய வகை கொரோனாவுக்கும் பயன்படுமா என்பது ஆராயப்பட்டு வருகிறது.