வரும் தேர்தலில் பிரிட்டன் பிரதமர் தனது சொந்த தொகுதியில் பதவி இழப்பார்- வெளியான அதிர்ச்சி கருத்துகணிப்பு!

britain-corona-infection
By Jon Jan 04, 2021 01:39 AM GMT
Report

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வரும் 2024ல் நடக்கவுள்ள பிரதமருக்கான தேர்தலில், பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் தன் சொந்த தொகுதியிலேயே,தோல்வி அடைவார் என, கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தல், 2024ல் நடக்க உள்ளது, பிரெக்சிட் எனப்படும், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது. கொரோனா வைரஸ் பாதிப்பு பல சிக்கல்களில் தற்போது பிரிட்டன் உள்ளது.

இந்த நிலையில், அங்கு வரும் 2024 ல் எந்த கட்சியினர் ஆட்சியினை பிடிப்பார்கள் என நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது தெரியவந்துள்ளது.

அதிலும், தற்போது பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சன் 2024 தேர்தலில், லண்டனுக்கு மேற்கே உள்ள உக்ஸ்பிரிட்ஜ் தொகுதியில், ஜான்சனுக்கு அதாவது (தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியே கிடைக்கும்.)எனவும் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

அதனால், பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்தை பிரிக்க போராடிவரும், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி, அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக, அந்தக் கட்சி மாற வாய்ப்புஉள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.