உலகில் முதன்முறையாக கொரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அனுமதி
கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில், 45,712,351 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் 8,115,229 பேர் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், 48,790,855 பேர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவது உறுதி என்றாலும், தடுப்பூசியின் வீரியம் குறையும் வாய்ப்புகள் இருப்பதாலையே தற்போது பூஸ்டர் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலகிலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிரவிர் என்ற மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.