ரூ.1,700 கோடியில் கட்டப்பட்டு வந்த பாலம் கண் இமைக்கும் நொடியில் சரிந்து விழுந்து விபத்து

Bihar
By Thahir Jun 05, 2023 09:48 AM GMT
Report

பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே ரூ.1,700 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த பாலம் இரண்டாவது முறையாக விழுந்து விபத்துக்குள்ளானது.

2வது முறையாக சரிந்து விழுந்த பாலம் 

பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் கங்கை ஆற்றின் நடுவே பாலம் ஒன்று அம்மாநில அரசு சார்பில் கட்டப்பட்டு வந்தது.

Bridge collapse accident in Bihar

இந்த பாலம் கட்டுவதற்காக அம்மாநில அரசு சார்பில் ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை வழக்கம் போல் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில் இரண்டாவது முறையாக பாலம் சரிந்து விழுந்தது.

இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயம் அடையவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுவதாக அத்தொகுதியின் எம்.எல்.ஏ நாராயண் மண்டல் தெரிவித்துள்ளார்.