திருமணத்தில் கரண்ட் கட் : மாப்பிளையை மாற்றி கரம் பிடித்த சகோதரிகள் - பின்னர் நிகழ்ந்த விநோத சம்பவம்!

By Swetha Subash May 10, 2022 07:05 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

திருமணத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சகோதரிகள் இருவர் தங்களின் மணமகனை மாற்றி திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பட்நகர் தெஹ்சில் அஸ்லானா கிராமத்தில் சகோதரிகள் இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெறவிருந்த இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விழாவில் ரமேஷ்லா என்பவரின் இரண்டு மகள்களான, நிகிதா மற்றும் கரிஷ்மா டங்வாரா போலா மற்றும் கணேஷ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டனர்.

திருமண விழாவில் மணப்பெண்கள் இருவரும் முகத்தை மறைத்து இருந்ததாலும், ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்ததாலும், தவறான மாப்பிள்ளைகளை கரம் பிடித்துள்ளனர்.

திருமணத்தில் கரண்ட் கட் : மாப்பிளையை மாற்றி கரம் பிடித்த சகோதரிகள் - பின்னர் நிகழ்ந்த விநோத சம்பவம்! | Brides Gets Married With Wrong Ones Power Cut

திருமணம் சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருட்டில், மணப்பெண்களை தவறான மாப்பிள்ளைகளுடன் திருமணம் முடித்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மணமகன்கள், மணமக்களை அவரவர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிறகு தான் திருமணம் மாற்றி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் குழப்பமடைந்த இரு வீட்டாரும் பேசி சுமுகமான முடிவுக்கு வந்த  பின்னர் மணமக்கள் மற்றும் மணமகன்கள் மறுநாள் தங்கள் சரியான துணையுடன் சடங்குகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு மறுபடியும் திருமணம் நடைபெற்றுள்ளது.

மின்சாரம் துண்டிப்பால் நிகழ்ந்த இந்த வினோதமான சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இது போன்ற சம்பவம் இந்தியாவில் மட்டும் தான் நடக்கும் என்பது போல் கருத்து தெரிவித்து வருகின்றனர்.