மணமகளின் தந்தையை இழுத்து கொண்டு ஓடிய மணமகனின் தாய்!
மணமகனின் தாயை இழுத்து கொண்டு மணப்பெண்ணின் தந்தை ஓட்டம் பிடித்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
விசித்திர சம்பவம்
மத்திய பிரதேசம், உன்ட்வாசா கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு கணவர் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவரது மகனுக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இதில் மணப்பெண்ணின் தாய் இறந்துவிட்டார்.
அந்த மணப்பெண் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார். இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திடீரென்று மணமகனின் தாயான 45 வயது பெண் மாயமானார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
தவித்த ஜோடி
இதனையடுத்து போலீஸில் புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து, சிக்லி என்ற கிராமத்தில் அந்த பெண் மீட்கப்பட்டார். அங்கு அவர் 50 வயது நிரம்பிய விவசாயியுடன் தனியாக வசித்து வந்தார். அது யாரென்றால், அந்த பெண்ணின் மகனுக்கு பார்த்த மணப்பெண்ணின் தந்தை திருமண பேச்சுவார்த்தையின்போது

மணமகளின் தந்தையின் பேச்சு, நடத்தையில் ஈர்க்கப்பட்ட அந்த மணமகனின் தாய் அவரை திருமணம் செய்து கொண்டு வாழ முடிவு செய்து வீட்டை விட்டு சென்றுள்ளனர். இதனால் திருமண நிச்சயதார்த்தம் நின்று போனது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.