திருமணத்தில் நண்பர்கள் கொடுத்த பரிசு - மேடையில் கதறி அழுத மணமகன்...!
திருமணம் ஒன்றில் நண்பர்கள் கொடுத்த பரிசைக் கண்டு மணமகன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நண்பர்கள் கொடுத்த பரிசு - கண்ணீர் விட்டு அழுத மணமகன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேட்டைச் சேர்ந்த அறிவழகனுக்கும், மதி என்ற பெண்ணிற்கும் கடந்த 13ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அறிவழகனுடைய நண்பர்கள் பரிசு ஒன்றை கொடுத்தனர்.
அந்த பரிசை அறிவழகன் திறந்து பார்த்தபோது துக்கம் தாங்காமல் கதறி அழுதார். அந்த பரிசு பொருளில், அறிவழகனின் இறந்த தந்தையின் பேனர் இருந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அறிவழகன், கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய அழுதார்.
இதைப் பார்த்ததும் அவருடைய நண்பர்கள் அவரை கட்டி அணைத்துக் கொண்டனர். திருமணத்திற்கு தந்தையே நேரில் வந்து பாராட்டியதாக அகமகிழ்ந்த அறிவழகன் நண்பர்களுக்கு தாய் நன்றி தெரிவித்தார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.