திருமண வரவேற்பில் மயங்கி விழுந்த மணப்பெண் - கடைசியில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

karnataka bridedeath organdonate
By Petchi Avudaiappan Feb 12, 2022 06:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கர்நாடகாவில் திருமண வரவேற்பில் மயங்கி விழுந்த மணப்பெண் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்கு உட்பட்ட சீனிவாசப்பூர் பகுதியை சேர்ந்த சைத்ரா என்ற இளம்பெண்ணு திருமண ஏற்பாடு செய்யப்பாட நிலையில் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மணப்பெண்ணும், மணமகனும் மேடையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது சைத்ரா திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்த உறவினர்கள் மூச்சுப் பேச்சற்று கிடந்த சைத்ராவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சைத்ரா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவிக்க இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சைத்ராவின் பெற்றோர் கதறி அழுதனர்.

திருமண நாளன்று மணமகள் இறந்த துக்கம் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து சைத்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். அவர்களின் இந்த செயலுக்கு பொதுமக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது. 

இதுதொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், “சைத்ராவின் வாழ்க்கையில் இது மிகப்பெரிய நாள். ஆனால் விதி வேறு திட்டங்களை தீட்டிவிட்டது. இதயத்தை நொருக்கும் சோகத்திற்கு இடையே, உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்துள்ளனர். இந்த செயல் பல உயிர்களை காப்பாற்றும்” என தெரிவித்துள்ளார்.