8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் - மத்தியப்பிரதேசத்தில் வேற லெவல் சம்பவம்

viral trending cheatingbride
By Petchi Avudaiappan Feb 03, 2022 11:54 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

மத்தியப்பிரதேசத்தில் 8 ஆண்களை  ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஊர்மிளா அஹிர்வார் என்ற 28 வயது பெண்ணுக்கு ரேணு ராஜ்புத் என்ற மறுபெயரும் உள்ளது. இவர் வசதியான ஆண்களை மயக்கி அவர்களை திருமணம் செய்து பின் அவர்களின் பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா, மத்திய பிரதேசத்தின் தாமோ மற்றும் சாகர் ஆகிய இடங்களில் உள்ள ஆண்களை ஏமாற்றிய ஊர்மிளாவை புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் படேல் என்ற நபரை 8 வதாக திருமணம் செய்து கொண்ட ஊர்மிளா காரில் அவரது கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் ஏற்பாடு செய்து வைத்திருந்த பாக்சந்த் கோரி என்பவர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இதையடுத்து மணமகன் படேல் தன்னிடம் கொடுத்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு கல்யாண பெண் ஊர்மிளா வழக்கம் போல் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையறிந்த போலீசார் காவல்துறையினர் அவரை விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர். திருமண மோசடிக்கு உதவியதாக அர்ச்சனா ராஜ்புத், பாக்சந்த் கோரி, அமர் சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓம்டி காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.எஸ்.பாகேல் தெரிவித்துள்ளார்.