3 மணி நேரம் நடந்தே கணவர் வீட்டுக்கு சென்ற மணப்பெண்.. சாலை வசதி இல்லாமல் சிரமப்படும் கிராமவாசிகள்

India Marriage
By Sakthi Raj Oct 23, 2026 12:55 PM GMT
Report

இந்தியா பல்வேறு நிலைகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் ஒரு சில கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலம் புல்கார் என்ற கிராமத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஷர்மிளா என்ற இளம் பெண்ணிற்கு அணில் என்பவருடன் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த பிறகு ஷர்மிளா கணவர் வீடு அமைந்து இருக்க கூடிய உண்டாவா என்ற கிராமத்திற்கு உறவினர்களுடன் சென்றார். அந்த நேரத்தில் வழித்தடம் சரியான சாலை வசதி இல்லாமல் கரடு முரடாக இருந்தது.

இதனை அடுத்து மணப்பெண் மற்றும் உறவினர்கள் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கக் கூடிய கிராமத்திற்கு கால் பயணமாக நடந்தே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

3 மணி நேரம் நடந்தே கணவர் வீட்டுக்கு சென்ற மணப்பெண்.. சாலை வசதி இல்லாமல் சிரமப்படும் கிராமவாசிகள் | Bride Walks 3Hrs To Reach Husband Home In Undava

உண்டாவா என்கின்ற கிராமத்திற்கு சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தே சென்று இருக்கிறார்கள். இதனை அடுத்து சரியான சாலை வசதி இல்லாமல் சிரமப்படும் கிராமவாசிகளுக்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தித் தருமாறு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு மணப்பெண் ஷர்மிளா கோரிக்கை வைத்திருக்கிறார்.

உத்தரகாண்டில் உண்டாவா என்ற கிராமத்தில் பல மலை கிராமங்களில் சரியான சாலை வசதி இல்லாததால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட கிராம மக்கள் நடந்தே செல்கின்ற நிலை இருக்கிறது. அந்த பகுதி கிராம மக்கள் அவர்களுடைய அடிப்படை தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி நிலையங்களுக்கும் செல்ல போதுமான வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

3 மணி நேரம் நடந்தே கணவர் வீட்டுக்கு சென்ற மணப்பெண்.. சாலை வசதி இல்லாமல் சிரமப்படும் கிராமவாசிகள் | Bride Walks 3Hrs To Reach Husband Home In Undava

இதனை தொடர்ந்து திருமண கோலத்தில் இளம்பெண் நடந்து செல்லக்கூடிய அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி மக்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.

இது குறித்து பயனர்கள் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் சில கிராமங்களில் இந்தியாவில் சரியான சாலை வசதி கூட இல்லாதது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், உத்தரகாண்டில் மலைப்பகுதிகளில் சாலைகள் இல்லாதது நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.