முதலிரவில் மாயமான மணப்பெண்; பதறிய மாப்பிள்ளை - இறுதியில் தரகர்..
திருமணமான முதல் இரவிலேயே மணப்பெண் மாயமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
மணப்பெண் மாயம்
உத்தரப் பிரதேசம், ஆக்ராவை சேர்ந்த பெண்ணுக்கும் ராஜஸ்தான், கிஷான்கரைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த திருமணத்தை ஜிதேந்திரா என்ற திருமணத் தரகர் மூலம் பேசி முடித்துள்ளனர். இதற்காக அந்த தரகருக்கு ₹2 லட்சம் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, திருமணம் ஜெய்ப்பூரில் பாரம்பரிய சடங்குகளுடன், இசை, இனிப்புகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் நடைபெற்றுள்ளது.
தரகருடன் எஸ்கேப்
இந்நிலையில், திருமணத்தின் முதல் இரவில், தம்பதியினர் படுக்கையறைக்கு சென்றபோது, அந்த பெண் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி, இன்று இரவு நாம் ஒன்றாக படுக்க முடியாது; இது எங்கள் சம்பிரதாயத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
பின் அதிகாலை 3 மணியளவில் மாப்பிள்ளை தண்ணீர் குடிக்க எழுந்தபோது, அந்தப் பெண் மாயமாகியுள்ளார். மேலும், அவர் அறையில் இருந்த பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து குடும்பத்தினர் உடனடியாக பெண்ணை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை . உடனே, போலீஸில் புகாரளித்ததில், திருமணத் தரகர் ஜிதேந்திரா மற்றும் அந்த பெண் இருவரும் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.