கல்யாணத்தில் மாப்பிள்ளையின் சகோதரரை கரம்பிடித்த மணமகள் - பரபரப்பு!

Uttar Pradesh Marriage
By Sumathi Jan 08, 2023 07:39 AM GMT
Report

மணமகனின் இளைய சகோதரரை மணமகள் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் மனைவி

உத்தர பிரதேசம், சைதங்காலி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், தவாய் குர்த் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவாகி இருந்தது. திருமண நாளன்று, மணமகள் வீட்டுக்கு மணமகன் தனது உறவினர்கள் என அனைவரும் வந்துள்ளனர்.

கல்யாணத்தில் மாப்பிள்ளையின் சகோதரரை கரம்பிடித்த மணமகள் - பரபரப்பு! | Bride Marry Groom Brother In Uttar Pradesh

தொடர்ந்து நிக்கா நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. இந்நிலையில், மணமகனின் முதல் மனைவி, குழந்தைகளுடன் மணமகள் கிராமத்திற்கு வந்து உள்ளார். போலீசாரும் தகவல் அறிந்து வந்தனர். தன்னிடம் எதுவும் தெரிவிக்காமல் 2-வது திருமணம் செய்துள்ளார் என கணவர் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சகோதரருடன் திருமணம்

தங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர் என தெரிவித்துள்ளார். அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மூத்த பஞ்சாயத்து தலைவர்கள் சிலர் காவல் நிலையத்திற்கு சென்று பரஸ்பர ஒப்புதலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி, முடிவு செய்தனர்.

இதன்படி, 2-வது திருமணம் செய்த மனைவியை மணமகன் விவாகரத்து செய்ய வேண்டும். அந்த மணமகள், மணமகனின் இளைய சகோதரரை திருமணம் செய்ய வேண்டும் என முடிவானது. இதனை தொடர்ந்து, மணமகனின் இளைய சகோதரரை மணமகள் திருமணம் செய்துக் கொண்டார்.