கல்யாணத்திற்கு லேட்டாக வந்த மாப்பிள்ளை...கடுப்பில் மணமகள் செய்த செயல்

By Petchi Avudaiappan Apr 29, 2022 11:28 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மணமகன் திருமணத்திற்கு தாமதமாக வந்ததால், கோபத்தில் மணப்பெண் வேறொருவரை திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22 ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. இதற்காக மாலை 4 மணி நல்ல நேரம் என குறிக்கப்பட்டு இருந்தது.

இதனால் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த நிலையில், மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகனின் வருகைக்காக திருமணம் நடக்கும் மண்டபத்தில் காத்திருந்துள்ளனர்.

நேரம் ஆனதே தவிர மணமகன் வரவேயில்லை. இதனால் மணமகள் குடும்பத்தினர் பொறுமையிழந்தனர். தொடர்ந்து மணமகன் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு போனால் போகட்டும் என்று 8 மணிக்கு மண்டபத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். வந்த பின்பும் மணமகன் தோரணையை விடாமல் மணமகள் குடும்பத்தினருடன் சண்டை போட்டுள்ளார்.

இதைக் கண்ட மணமகளின் தந்தை, மணமகனை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில் திருமணத்திற்கு வந்த உறவுக்காரர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தி அவருக்கே தனது மகளை மணமுடித்து வைத்தார். 

இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.