மணப்பெண் மீது வெடித்த குண்டு - திருமண போட்டோ ஷூட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
திருமண போட்டோ ஷூட்டில், புகைக்குண்டு வெடித்து மணமகள் காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போட்டோ ஷூட்
இன்றைய கால கட்டத்தில் திருமணத்திற்கு முன் எடுக்கப்படும் போட்டோ ஷூட் மிகவும் பிரபலமானது. சில ஜோடிகல் எல்லைமீறிய ஆபாசமாகவும் வெட்டிங் ஷூட் நடத்துகின்றனர்.இதுபோன்று எடுக்கப்படும் போட்டோ ஷூட்டில் அசம்பாவிதங்களும் ஏற்படும்.
அந்த வகையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி நடத்திய போட்டோ ஷூட்டில், புகைக்குண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் விக்கி மற்றும் பியா.
இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மந்தத்துடன் பூர்வீக ஊரான பெங்களூருவில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த போட்டோ ஷூட்டை வித்தியாசமாக எடுக்க நினைத்த போட்டோகிராபர், ஸ்மோக் எபெக்ட்டில், தீப்பிழம்பு தெறிக்க மணமக்களை போட்டோ எடுக்க நினைத்துள்ளார்.
மணமகள் காயம்
அதற்காக பின்னணியில் வண்ணப்புகை குண்டுகள் வெடிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார். அப்போது வண்ணப்புகை குண்டுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதற எதிர்பாராதவிதமாக புகைக்குண்டு ஒன்று புதுப்பெண்ணின் உடலில் பட்டு வெடித்தது.
சிதறிய தீப்பிழம்பு பெண்ணின் உடல் மட்டும் தலைமுடியில் பட்டு பொசுக்கி விட்டது. இதனால் அவர் வலியில் துடித்து கதறினார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது அவருடைய உடலின் முகுது மற்றும் இடைப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. அவருடைய தலைமுடியும் எரிந்து கருகி இருந்தது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஒரே நாளில் 76 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.