மாப்பிள்ளையை வெயிட் பண்ண சொல்லுங்க... நமக்கு சோறுதான் முக்கியம்– வைரலாகும் வீடியோ

bridevideo
By Petchi Avudaiappan Nov 13, 2021 04:46 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 திருமணத்துக்கு தயாராகும் மணமகள் ஒருவர் மாப்பிள்ளையை காத்திருக்க சொல்லிவிட்டு சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத தருணம் என்பது உண்மை. உற்றார், உறவினர்களை அழைத்து, மகிழ்வுடன் வரவேற்று, மன நிறைவுடன் உபசரித்து, அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்று என அந்த இடமே களைக்கட்டும் அளவுக்கு நிகழ்வுகள் நடக்கும். 

இதில் மண்பெண்கள் குறித்து கேட்கவே வேண்டாம். கைகளுக்கு மருதாணி, சிகை அலங்காரம், மேக்கப் செய்வது என அன்றைய தினத்தின் மகாராணி அவர்கள் தான். இந்த அவசர கதியில் மணமக்களுக்கு சாப்பிடவே நேரம் இருக்காது.

இந்நிலையில் இந்திய மணப்பெண் ஒருவர் நமக்கு சோறுதான் முக்கியம் மாப்பிள்ளையை கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுங்க எனக் கூறி மேகியை வெளுத்துக்கட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் சிகையலங்காரம் செய்பவர்கள் அந்த பெண்ணுக்கு சிகை அலங்காரம் செய்துக்கொண்டிருக்க மணமகள் மேகியை ருசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த பெண் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்க. எனக்கு பசிக்கிறது.. மாப்பிள்ளை எனக்காக காத்திருக்கிறாரா என பதிலளிக்கிறார். மாப்பிள்ளை எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் எனக் கேட்க. அரை மணிநேரம் இல்லை இல்லை ஒரு மணி நேரம் வரை ஆகலாம் எனக் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.