மணப்பெண்ணுக்கு இருந்த ஆசை - திருமணத்தன்றே தற்கொலை செய்துகொண்ட சோகம்
திருமணத்தன்றே பெண் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
திருமணம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(56). கல்லூரி படிப்பை முடித்துள்ள இவரது மகள் சவுமியாவிற்கு 24 வயதான நிலையில் திருமணத்திற்கு வரன் பார்த்துள்ளார்.
இதனையடுத்து, கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி(27) என்பவருடன் சவுமியாவுக்கு நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம்(31.01.2025) கம்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
தற்கொலை
அதனையடுத்து மணமக்களுக்கு பால் பழம் வழங்க பெண் வீட்டார் கதிர்நரசிங்கபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். வீட்டுக்கு வந்த சவுமியா பாத்ரூம் செல்ல வேண்டும் என கூறி படுக்கை அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
வெகுநேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள், தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று போது, அங்கிருந்த மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
சவுமியா திருமணத்தில் விருப்பம் இன்றி இருந்ததாகவும், கன்னியாஸ்திரியாக போகிறேன் என்று கூறி கொண்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.