மணமேடையில் சராமாரியாக அறைந்து கொண்ட மணமக்கள் - அதிர்ச்சியில் மக்கள்
மணமேடையில் மணமக்கள் சராமாரியாக அறைந்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பொதுவாக திருமண நிகழ்வுகளில் அவ்வப்போது பல விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். மணப்பெண், மணமகன் மாறுவது, திருமணம் நிற்பது, வானத்தில், நீருக்கடியின் திருமணம் என ஒவ்வொரு செய்திகளையும் பார்க்கும் போது பலருக்கும் வியப்பாக இருக்கும்.
அதேசமயம் பிரச்சனைகள் இல்லாத சுப நிகழ்ச்சிகள் இந்தியாவில் அரிதினும் அரிது. அப்படியான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. திருமணத்தை பொறுத்தவரை இந்தியாவின் கலாச்சாரம் மிகவும் சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் இருப்பதால் பல நேரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த வீடியோவில் தொடக்கத்திலேயே மணமகள் இனிப்புகளை வழங்க முயற்சிப்பதும், மணமகனோ அவர் வழங்கும் இனிப்பின் மீது கவனம் செலுத்துவதை விட அதை புகைப்படம் எடுப்பதில் குறியாக இருக்கிறார். இதுதொடர்பாக புகைப்பட கலைஞரிடம் பேசிக்கொண்டே இருந்த மணமகனின் முகத்தில் வைத்து தேய்த்து விடுகிறார்.
புது மனைவியின் இந்த செயலை கண்டு கோபமடையும் மணமகன் மணமகளின் கன்னத்தில் ஒரு அடி அடிக்க உடனே பதிலுக்கு மணமகளும் கணவனின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார். இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை பிரபல நகைச்சுவை நடிகர் ஆன சுனில் குரோவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட வீடியோ உண்மையான சம்பவம் அல்ல என்றும், ஒரு ஸ்க்ரிப்ட்ட யூட்யூப் வீடியோவில் இருந்து கட் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.