நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் - மீசையை வெட்டிய பெண் வீட்டார்

Marriage Rajasthan
By Karthikraja Jan 22, 2025 05:30 PM GMT
Report

 நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மீசையை வெட்டியுள்ளனர்.

நின்ற நிச்சயதார்த்தம்

திருமணத்தில் சாப்பாடு சரியில்லை, மணமகன் மது போதையில் உள்ளார் என சில காரணங்களால் கடைசி நேரத்தில் திருமணம் நிற்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

rajasthan engagement

இதே போல், ராஜஸ்தான் மாநிலம், கரௌலி மாவட்டத்தில் நிச்சயத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டநிலையில், இறுதியில் மாப்பிள்ளை வீட்டார் நிச்சயதார்த்தை நிறுத்தியுள்ளனர். 

பெண் பார்த்து தராத மேட்ரிமோனி - அபராதம் விதித்த நீதிமன்றம்

பெண் பார்த்து தராத மேட்ரிமோனி - அபராதம் விதித்த நீதிமன்றம்

மீசையை வெட்டிய பெண் வீட்டார்

இதனால் பெண் வீட்டார் ஆத்திரமடைந்துள்ள நிலையில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியுள்ள நிலையில், ,மணமகனின் சகோதரரை பிடித்த பெண் வீட்டார் அவரது மீசையை வெட்டி எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இது குறித்து மணமகன் மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், அந்த பெண் புகைப்படத்தில் பார்த்த போது இருந்தது போல், 1% கூட நேரில் இல்லை. இந்த ஏமாற்றத்தை எங்களால் தாங்க முடியவில்லை. எங்களுக்கு பெரிய அநீதி நடந்துள்ளது. இதன் காரணமாக சிறிது அவகாசம் தேவை என்று கூறினோம் என தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.