மணமேடையில் குட்கா போட்ட மணப்பெண் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
மணமேடையில் மணப்பெண் குட்கா போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
திருமணம்
ராஜஸ்தானின் பரான் மாவட்டத்தில் திருமண விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், இரண்டாயிரத்து இருநூற்றி இருபத்தி இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழா ஏற்கனவே உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. இதில். திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். அப்போது நடுவழியில் ஒரு மணப்பெண் தன் கணவனிடம் இருந்து மறைத்து, குட்காவை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.
வைரல் வீடியோ
அப்போது செல்போனில் திருமண நிகழ்வை பதிவு செய்து கொண்டிருந்த ஒருவரின் கேமராவில் இந்தக் காட்சி சிக்கியது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Bride of the Year .. Kanpur Rocks
— Hasna Zaroori Hai ?? (@HasnaZarooriHai) May 30, 2023
?????? pic.twitter.com/JGLufUOG1l
ஸ்ரீ மஹாவீர் கோஷாலா கல்யாண் சன்ஸ்தான் இந்த வெகுஜன திருமணத்தை ஏற்பாடு செய்தது. ராஜஸ்தான் மாநில சுரங்கத்துறை அமைச்சர் விழாவிற்கு தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.