உடலுறுப்பை தானம் செய்த மணப்பெண்ணின் பெற்றோர்

karnataka collapsed kolapur weddingbride braindead organsdonated
By Swetha Subash Feb 13, 2022 02:09 PM GMT
Report

திருமண வரவேற்பின்போது மூளைச்சாவால் உயிரிழந்த மணப்பெண்ணின் உடல் உறுப்புகளை தானமாக பெற்றோர் வழங்கினர்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்கு உட்பட்ட சீனிவாசப்பூர் பகுதியை சேர்ந்தவர் சைத்ரா.

இளம் பெண்ணான இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மண மேடையில் மணக்கோலத்தில் இருந்த சைத்ரா திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது. திருமண நாளன்று மகள் இறந்த துக்கத்திலும் அவரின் பெற்றோர் மகளின் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

இதுபற்றி அறிந்த கர்நாடக அமைச்சர், "சைத்ராவுக்கு இது மிகவும் முக்கியமான நாள். ஆனால் விதி வேறு மாதிரியாக நினைத்துவிட்டது.

இதயத்தை நொறுக்கும் இந்த சோகத்திலும் அவரது பெற்றோர்கள் உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திருமண வரவேற்பின்போது மூளைச்சாவால் உயிரிழந்த மணப்பெண்ணின் உடல் உறுப்புகளைதானமாக பெற்றோர் வழங்கினர்.கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்கு உட்பட்ட சீனிவாசப்பூர் பகுதியை சேர்ந்தவர் சைத்ரா.

இளம் பெண்ணான இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணவரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மண மேடையில் மணக்கோலத்தில் இருந்த சைத்ராதிடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரைமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளைச்சாவுகாரணமாக உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது. திருமண நாளன்று மகள் இறந்த துக்கத்திலும் அவரின் பெற்றோர் மகளின் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

இதுபற்றி அறிந்த கர்நாடக அமைச்சர்,

"சைத்ராவுக்கு இது மிகவும் முக்கியமான நாள். ஆனால் விதிவேறு மாதிரியாக நினைத்துவிட்டது. இதயத்தை நொறுக்கும் இந்த சோகத்திலும் அவரதுபெற்றோர்கள் உடலுறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்" என ட்விட்டரில்தெரிவித்துள்ளார்.