தனக்கு தானே தீவைத்து கொண்ட காதல் ஜோடி... வித்தியாசமான முறையில் நடந்த திருமண வரவேற்பு

By Petchi Avudaiappan May 13, 2022 08:36 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

காதல் ஜோடிகளான ஸ்டண்ட் கலைஞர்கள் இருவரும் வித்தியாசமான முறையில் நடந்த திருமண வரவேற்பு நடத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. இதனை எப்படியெல்லாம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என ரூம் போட்டு நம்மில் பலரும் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். அந்த வகையில் காதல் ஜோடிகளான ஸ்டண்ட் கலைஞர்கள் இருவரின் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கேப் ஜெசாப் மற்றும் ஆம்பிர் பாம்பிர் என்ற இருவரும் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் வேலை செய்யும் போது ஒருவரை ஒருவர் சந்தித்து காதலில் விழுந்தனர். இருவரும் திருமணம் செய்துக் கொண்ட நிலையில்  தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்தி உள்ளனர்.

அதன்படி திருமண புகைப்படக்காரர் ரஸ் பவல் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மணமக்கள் தங்கள் முதுகின் பின்புறம் தீயை பற்றவைத்து கொண்டு வேகமாக நடந்து வருகின்றனர். அப்போது அவர்களை விருந்தினர்கள் உற்சாகபடுத்த கை தட்டி கொண்டு இருக்கின்றனர். தீ கொளுந்து விட்டு எரிகிறது. இதற்கிடையே ஜோடி ஹாயாக நடந்து வருகிறது. பின்னர் தீயை அணைக்கும் கருவிகளைக் வைத்து இருவருக்கும் தீயை அணைத்தனர். 

இதனைப் பார்த்த பலரும் இப்படி விபரீத செயல்களில் ஈடுபடலாமா என்ற கேள்வியெழுப்பியுள்ளனர்.