வர்ற மாப்பிள்ளை பாவம் சார்.. மணமகள் அலங்காரத்தில் மிரட்டும் மணப்பெண்.. வைரலாகும் வீடியோ!

viralvideo bridalgirl maariagegirl
By Irumporai Aug 04, 2021 12:27 PM GMT
Report

திருமணக்கோலத்தில் தண்டால் எடுக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. பொதுவாக இந்தியாவில் திருமணங்கள் என்றாலே கோலாகலம் தான் ,அதிலும் திருமணவிழாக்களில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் வேடிக்கையான ஒன்றுதான் இந்த நிலையில் மணமகள் போன்று அலங்காரத்துடன் பெண் ஒருவர் செய்த செயல், பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

   அந்த வீடியோவில் நல்ல எடையுள்ள பாரம்பரியமான திருமண உடையை அணிந்துள்ளார் அந்த பெண் கூடவே நகை அலங்காரம், சிகை அலங்காரம் என மணப்பெண்ணிற்கே உரிய அத்தனை அலங்காரத்துடனும் காணப்படுகிறார்.

பொதுவாக மணபெண் என்றால் வெட்கபடுவது போல் போஸ் கொடுப்பார்கள் ஆனால் இவரோ, முழு அலங்காரத்துடன் கீழே தரையில் எனது தனது இரு கைகளையும் விரித்தபடி தண்டால் எடுத்து அசத்துகிறார்.

இந்த வீடியோவை ஆனா அரோரா எனும் மாடல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர் கடந்த வாரம் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவை இதுவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

உடற்பயிற்சி மீது மணப்பெண் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் இந்த வீடியோ பறைசாற்றுவது போல் உள்ளது அதே சமயம் இந்த பெண்ணுக்கு வரும் கணவர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என இணைய வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.