கனமழையால் சேதமான செங்கல் சூளைகள் - நிவாரணம் வழங்க கோரிக்கை!
குமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் சுமார் ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான செங்கல்கள் முழுதுமாக சேதமடைந்துள்ளது .
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையினாலும் அணைகளில்இருந்து உபரி நீர் திறக்கபட்டதாலும்மாவட்டம் முழுவதும் பெரிய அளவிலான விவசாய நிலங்கள் சேதம் ஏற்பட்டுள்ளன.
மேலும் ஆற்றங்கரை பகுதிகளான மூவாற்றுமுகம், கடைவிளை, திக்குறிச்சி , குழித்துறை போன்ற பகுதிகளில் உள்ள செங்கல் சூளை மற்றும் உலர வைத்திருந்த செங்கற்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது .
இதனால் சுமார் ஆறு கோடி மதிப்பிலான செங்கல் வெள்ளத்தில் மூழ்கி வீணானது செங்கல் எனவே பெரிய அளவில் இழப்பு பாதிப்புகளை உணர்ந்து பாதிக்கப்பட்ட செங்கல் சூளைகளின் உரிமையாளர்களின் வங்கி கடன் ரத்து செய்வதோடு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல் IBC Tamil