அவர் பேட்டிங் கிட்ட நானும் சச்சினும் கூட நெருங்க முடியாது - பிரையன் லாரா
ஹூப்பரின் பேட்டிங் திறமைக்கு அருகில் நெருங்க முடியாது என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
பிரையன் லாரா
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவ்வப்போது தனது கருத்துக்கள் மூலம் கவனம் பெற்று வருகிறார்.
வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டை பொறுத்த வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் உள்ளார்.

புகழும் அதிகாரமும் விராட்டை மாற்றிவிட்டது - நாங்கள் பேசுவதையே நிறுத்திவிட்டோம்!! முன்னாள் இந்திய வீரர் வருத்தம்
நல்ல பேட்டிங்
இந்நிலையில், அவர் எழுதியுள்ள “Lara: The England Chronicles” என்ற சுயசரிதை புத்தகத்தில், “கார்ல் ஹூப்பர் நான் பார்த்த மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தார். நானும் சச்சின் டெண்டுல்கரும் கூட அந்த திறமையை நெருங்க மாட்டோம் என்று நினைக்கிறேன்.
கார்ல் ஹூப்பர் விளையாட ஆரம்பித்ததில் இருந்து கேப்டன் ஆனது வரை அவரது எண்கள் வித்தியாசமானது. ஒரு கேப்டனாக ஹூப்பர் 50க்கு அருகில் நல்ல பேட்டிங் சராசரி வைத்திருந்தார். ஆனால் ஒரு கேப்டனாக மட்டுமே இந்த சராசரி வைத்திருந்தார் என்பது வருத்தம் அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கார்ல் ஹூப்பர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் முக்கிய பங்கு வகித்தார். தனது ஸ்டைலான பேட்டிங் மற்றும் திறமையான ஆப் ஸ்பின் மூலம் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
