ஒருவழியாக பிரெக்ஸிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது - போரிஸ் ஜான்சன்

By Jon Dec 25, 2020 08:16 PM GMT
Report

பிரெக்ஸிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. பல மாதங்களாக கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இங்கிலாந்தின் உடனடி விலகல் பொருளாதார பாதிப்பை குறைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

தற்போது நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஜனவரி 1ம் தேதியுடன் பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவுக்கு வருகிறது.

ஆகையால் இதில் யாரும் மனவேற்றுமை இன்றி ஒரு நல்ல ஒப்பந்தத்துடன் பிரிந்து செல்லலாம் என இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஆகிய இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில் பிரெக்சிட் ஒப்பந்தம் முடிவு குறித்து இங்கிலாந்து அதிபர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தாவது, "ஒப்பந்தம் முடிவடைந்தது" என பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவீட் செய்துள்ளார், இங்கிலாந்து ஐரோப்பாவின் நட்பு நாடாகவும் "முதலிட சந்தையாகவும்" இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.