“இவரை டீம்ல எடுங்க...நியூசிலாந்து அவ்வளவு தான்” - பிரபல முன்னாள் வீரர் அட்வைஸ்
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியை திணறடிக்க இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ அறிவுரை வழங்கியுள்ளார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான தோல்விக்குப் பிறகு இந்திய அணி தனது 2வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. கிட்டத்தட்ட வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிரட் லீ நியூசிலாந்து அணியை திணறடிக்க இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதிக அனுபவம் கொண்ட வீரரான அஸ்வினுக்கு தான் மிகப்பெரிய ரசிகன் என்றும், அவரால் சூழ்நிலையை உணர்ந்து விளையாட முடியும் எனவும் பிரட் லீ கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் அஸ்வின் அணிக்கு தேவையானதை மிக சரியாகவே செய்து கொடுத்து வருகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.