பிரபல கிரிக்கெட் வீரரின் அந்தரங்க வீடியோ - ”இப்படி பண்ணலாமா?” என அதிர்ச்சியான ரசிகர்கள்
கிரிக்கெட் உலகில் மீண்டும் சூதாட்டம் என்றழைக்கப்படும் மேட்ச் பிக்ஸிங் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஜிம்பாப்வேவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் பிராண்டன் டைலருக்கு இந்திய தொழில் அதிபரிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது அதில் ஜிம்பாப்வேயில் டி20 கிரிக்கெட் தொடரை தொடங்க ஆர்வமாக உள்ளோம். நீங்கள் தான் அதற்கு உதவ வேண்டும் .இதை பற்றி ஆலோசனை நடத்த இந்தியா வருமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா வருவதற்காக 15 ஆயிரம் அமெரிக்க டாலர் டைலருக்கு வழங்கப்பட்டுள்ளது. 6 மாதங்களாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் சம்பளம் வழங்காததால் பிரண்டன் டைலரும், இந்தியா வந்து அந்த தொழில் அதிபரை சந்தித்துள்ளார். அப்போது அந்த தொழில் அதிபர் ஒரு பார்டிக்கு டைலரை அழைத்து சென்று சில போதை பொருட்களை தந்துள்ளார்.
முதலில் வேண்டாம் என மறுத்த டைலர் தொடர்ந்து தொழில் அதிபர் வற்புறுத்தியதால் அதனை உட்கொண்டுள்ளார். பின்னர், அங்கிருந்த மாடல் அழிகிகளுடன் டைலர் உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து அடுத்த நாள் தொழில் அதிபர் நேரடியாக டைலரின் அறைக்கு வந்து , நேற்று நீ செய்த காரியங்களை எல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
நான் சொல்வதை போல் கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் செய்தால் உனக்கு கூடுதல் பணம் தருகிறேன் என்று கூறி 20 ஆயிரம் அமெரிக்க டாலரை அந்த தொழில் அதிபர் வழங்கியுள்ளார். தாம் மிரட்டப்படுகிறோம் என்பதை உணர்ந்த டைலர் அதற்கு ஓப்புகொண்டு அங்கிருந்த புறப்பட்டு ஜிம்பாப்வேவுக்கு புறப்பட்டார்.
ஜிம்பாப்வே வந்ததும், தனது அந்தரங்க வீடியோ வெளியானால் என்ன செய்வது என்று பயத்தில் தவறான பழக்கங்களுக்கு டைலர் அடிமையாகி உள்ளார்.இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்து 4 மாதங்களுக்கு பிறகு ஐசிசியிடம் டைலர் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஐசிசி விசாரணை நடத்தி வருகிறது. எனினும் சூதாட்ட தரகர்கள் யாராவது அணுகினால் உடனடியாக ஐசிசியிடம் புகார் அளிக்க வேண்டும்.அப்படி கூறாமல் தாமதப்படுத்தினால், பிக்சிங் செய்ததற்கான தண்டனையே வழங்கப்படும் என்பது ஐசிசி விதி.
இதனால் பிராண்டன் டைலர் மீது ஐசிசி தடை விதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள டைலர், நான் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்றும் கிரிக்கெட் மீது உண்மையாக பற்று கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். தமது மனநலம் பாதிக்கப்பட்டதால் உடனடியாக ஐசிசியிடம் புகார் அளிக்க முடியவில்லை. இனி நான் செய்த தவறை இளம் வீரர்கள் செய்ய வேண்டாம் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
மும்பையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் தான் இந்த ஸ்பாட் பிக்சிங்கிற்கு பின்புலத்தில் இருப்பதாக பகீர் புகார்கள் எழுந்துள்ளது.