தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம்; குவியும் கூட்டம் - எங்கு தெரியுமா?
தாய்ப்பால் ஐஸ்கிரீம் விற்பனைக்கு வந்துள்ளது.
தாய்ப்பால் ஐஸ்கிரீம்
அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உண்மையான தாய்ப்பாலில் இருந்து இந்த ஐஸ்கிரீம் வழங்கப்படபோவதில்லை.
தாய்ப்பாலுக்கு நிகரான சுவையில் தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்துகளை இந்த ஐஸ்கிரீம் வழங்கவுள்ளது. இதில் இனிப்பு, உவர்ப்பு சுவையுடன் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி, வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவியும் கூட்டம்
பால், க்ரீம், முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை ஆகியவற்றுடன், கூடுதல் சுவைக்காக தேன் மற்றும் பழச்சாறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. LIMITED EDITION -ஆக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஐஸ்கிரீம் நியூயார்க்கில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
அங்குள்ள வாசிகள் இந்த ஐஸ்கிரீமை அதிகளவில் விரும்புவதாக கூறப்படுகிறது. இது விற்பனைக்கு வந்ததில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த ஐஸ்கிரீமை வாங்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.