குழந்தை பெறாமலே தாய்ப்பால் கொடுக்கலாமா? - மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்? அலசுவோம்

lifestyle breast-feeding without-having-a-baby
By Nandhini Apr 01, 2022 06:56 AM GMT
Report

பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மருந்து. காரணம் தாய்ப்பாலில் இயற்கையிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. தொடர்ந்து தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு நோய்கள் வராது என்பது உண்மை.

ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும்போதே தாய்க்கும், குழந்தைக்குமான உறவு தொடங்கிவிடுகிறது. எனவே, பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்ட தாய்ப்பாலை குழந்தைக்குக் கொடுக்காவிட்டால் உடல் ரீதியாகத் தாய்க்கு சில பிரச்னைகள் வந்துவிடும்.

குழந்தை பெறாமல் தாய்ப்பால் சுரக்குமா? என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்ப்போம் -

குழ‌ந்தைப் பெறாத சில பெண்களின் மார்பகங்களிலிருந்து பால் சுரக்குமா என்றால் பால் சுரக்கும் என்பது மருத்துவர்களின் பதில்.

இதற்கு காரணம் பால் சுரக்கும் செல்களான பிட்யூட்டரி சுரப்பிக்கும், ஹைபோதலாமஸ் (hypo thalamus) என்ற பகுதிக்கும் தொடர்பு பாதிக்கப்படுவதால், குழந்தை பெறாமலேயே பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கிறது.

பெண்களின் மார்பங்களில் இருக்கும் பிட்யூட்டரி என்ற சுரப்பியில் ஏதாவது கட்டிகள் இருந்தாலோ அல்ல‍து தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மாற்றங்கள் இருந்தாலோ அல்லது மற்ற மருந்துகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பக்க‍விளைவுகளாலும் இந்த மாதிரியான பால் சுரக்கும் நிகழ்வு நடக்கும்.

மேலும், கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொள்ளும் பெண்களின் சிலரது மார்பகங்களில் பால் கசிய வாய்ப்புக்கள் உள்ளது என்று மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தை பெறாமலே தாய்ப்பால் கொடுக்கலாமா? - மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்? அலசுவோம் | Breast Feeding Without Having A Baby

குழந்தையை தத்தெடுத்து கொள்பவர்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா?

தாய்ப்பால் சுரக்க வைக்கும் ஹார்மோன்களை மருந்துகள் பயன்படுத்தினால், குழந்தை பெறாமலேயே தாய்ப்பால் சுரக்க வைக்க முடியும்.

ஹார்மோன் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.கொஞ்ச நாட்களுக்கு எடுத்துக்கொண்டாலே தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்து விடும்.

தாய்ப்பால் சுரக்க வைக்கும் ஹார்மோன்களை தூண்டும் மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதுவும் ஏற்படாது.

கர்ப்பபை அகற்றியவர்களுக்கும், ஹார்மோன் மாத்திரைகளை கொடுத்து பால் சுரக்க வைக்க முடியும்.      

You May Like This