மதுபோதையில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து பாமக நிர்வாகி அட்டூழியம்

Party PMK Breaking Class Member
By Thahir Nov 06, 2021 07:00 AM GMT
Report

சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை போதை ஆசாமி ஒருவர் கல் விட்டு எறிந்து கண்ணாடியை உடைத்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நெய்வேலியில் இருந்து கடலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

வடலுார் நோக்கி வந்த அப்பேருந்தை வழிமறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் வடலூர் நகர துனை தலைவர் மதியழகன் குடிபோதையில் அரசு பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் மதியழகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்