சிறுபான்மை மாணவர்களுக்காக இதை மத்திய அரசு செய்தே ஆகணும் : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

M K Stalin DMK Narendra Modi
By Irumporai Dec 07, 2022 01:09 PM GMT
Report

கல்வி உதவி தொகையின மீண்டும் வழங்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளா

கல்வி உதவி தொகை

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை மீண்டும் வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகையினை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வேண்டும் என கூறியுள்ளார்.

முதலமைச்சர் கடிதம்

மேலும் தனது கடிதத்தில் முதலமைச்சர் 2021-22 ல் தமிழகத்தை சேர்ந்த 4,49,559 மாணவர்களுக்கு ரூ 86.76 கோடி உதவி தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மாணவர்களுக்காக இதை மத்திய அரசு செய்தே ஆகணும் : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் | Breaking Cm Stalins Letter To Pm Mod

9மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவி தொகை என்பது தொடக்க கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைந்துவிடும். இவ்வாறு மத்திய அரசு எடுக்கும் முடிவினால் தமிழகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழை சிறுபான்மை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.