Thursday, Jul 24, 2025

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு : காரணம் என்ன ?

assembly aiadmk walkout
By Irumporai 4 years ago
Report

தமிழக சட்டபேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் மூன்றாவது நாளான இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைக்கு கேள்வி – பதில் நேரத்துடன் தொடங்கும் சட்டப்பேரவையில் பல்வேறு சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட இருந்தனர்.

குறிப்பாக அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ,சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தன, கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டாக குறைக்க எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஒருபகுதியாக முதலமைச்சர் பதிலுரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பாகவே அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ரத்து செய்வதற்கான சட்ட முன் வடிவை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.