தமிழக பட்ஜெட் வெளிநடப்பு செய்த அதிமுக ,காரணம் என்ன?

aiadmk tnbudjet legislatorswalkout TNBudget2022
By Irumporai Mar 18, 2022 05:21 AM GMT
Report

நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார். அமளி செய்வது சரிதானா..? இன்று நிதிநிலை அறிக்கை மட்டும் தான் தாக்கல் செய்யப்படும் என அறிந்தும் அதிமுகவினர் அமளி செய்வது சரிதானா..? என சபாநாயகர் கேள்வி எழுப்பினார். 

ஏற்கனவே முதலமைச்சர்களாக இருந்த இருவருக்கும் சட்ட நடைமுறைகள் தெரியும். அதிமுகவினர் பேசியது எதுவுமே அவை குறிப்பில் ஏறாது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுகவினர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

சபாநாயகர் கோரிக்கை விடுத்தும் மதிக்காமல் அதிமுகவினர் தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக வெளிநடப்பு : பட்ஜெட் உரைக்கும் முன் பேச வாய்ப்பு அளிக்கப்படாததால் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, ஜெயக்குமார் கைது உள்ளிட்டவை குறித்து பேச அனுமதிக்காததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அமளியில் ஈடுபட்டு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.