காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

TVK
By Fathima Jun 15, 2026 01:39 PM GMT
Report

தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதில் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை குறித்து பல்வேறு திட்டங்கள் சத்துணவு மையங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு | Breakfast Scheme Expanded Up To Class 8

மேலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி இத்திட்டத்தினை முதற்கட்டமாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.