காலையிலேயே கள ஆய்வை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்
வேலூரில் உள்ள பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தினை ஆய்வு செய்தர்.
காலை சிற்றுண்டி திட்டம்
வேலூர் மாவட்டத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முதல்வர் ஸ்டாலின் ரயில் மார்க்கமாக வேலூர் சென்றடைந்தார்.
???
— TMGL Senthil Nathan (@TMGLSenthil) February 2, 2023
களத்தில் ஆய்வு செய்யும் முதலமைச்சர்!! @mkstalin ?? pic.twitter.com/44qTUX2eYF
இந்த நிலையில் இன்று காலை கல ஆய்வின் போது முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வேலூர் ,திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.
மாணவர்களுக்கு காலை உணவு
இந்த நிலையில் வேலூரில் 2 நாட்கள் ஆய்வின் ஒரு பகுதியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாலையிலேயே கள ஆய்வை தொடங்கினார்.
அதன்படி வேலூரில் உள்ள சத்துவாச்சாரி ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தினை அவர் ஆய்வு செய்தார். பின்னர் சிற்றுண்டி சாப்பிட்டு அதன் தரத்தை சோதித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி பரிமாறினார்