முதலமைச்சர் தொடங்கி வைத்த காலை சிற்றுண்டி திட்டத்தில் என்னென்ன உணவுகள் தெரியுமா?
தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
சரி இப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் என்னென அதனை பற்றி தற்போது பார்க்கலாம்.
திங்கள்கிழமை :
ரவா உப்புமா + காய்கறி சாம்பார் சேமியா உப்புமா + காய்கறி சாம்பார் அரிசு உப்புமா + காய்கறி சாம்பார் கோதுமைரவா உப்புமா + காய்கறி சாம்பார்
செவ்வாய்கிழமை :
ரவா காய்கறி கிச்சடி சேமியா காய்கறி கிச்சடி சோள காய்கறி கிச்சடி கோதுமை ரவாகாய்கறி கிச்சடி
புதன்கிழமை :
ரவா பொங்கல் + காய்கறி சாம்பார் வெண்பொங்கல் + காய்கறி சாம்பார்
வியாழக்கிழமை :
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார் அரிசி+ உப்புமா + காய்கறி சாம்பார் ரவா உப்புமா + காய்கறி சாம்பார் கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
வெள்ளிக்கிழமை :
ரவா காய்கறி கிச்சடி
சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவா காய்கறி கிச்சடி
கூடுதலாக ரவா கேசரி, சேமியா கேசரி
மேலும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது போன்ற அறிவுரைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.