மருத்துவர் to மாண்புமிகு..! Breakfast With அமைச்சர் மதிவேந்தன்
ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சருமான மதிவேந்தனுடன், IBC தமிழ் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெய்லானி சந்தித்து உரையாடினார்.

இதில், 5 ஆண்டுகளில் ராசிபுரம் தொகுதிக்காக செய்தது என்ன?, 3 துறைகளின் அமைச்சராக அவரின் செயல்பாடு, ராசிபுரம் தொகுதி 2021 ஆம் ஆண்டில் எப்படி இருந்தது? தற்போது எப்படி மாற்றப்பட்டுள்ளது? என்பது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
மருத்துவராக பணியாற்றிய போது, அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், நள்ளிரவு 2 மணிக்கு கூட சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் இருக்கும், இதன் காரணமாக வாரத்திற்கு 2 நாட்களே வழக்கம் போல் தூங்க முடியும் என தனது அரசியலுக்கு முந்தைய நாட்களை நினைவு கூர்ந்தார்.
மேலும், தனது கிளினிக்கில் சிகிச்சைக்கு வரும் மருத்துவ பயனாளர்களிடம், தற்போதும் ரூ.30 என்ற அளவிலான மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதையும் தெரிவித்தார்.
நான் சட்டமன்ற உறுப்பினராகும் முன்னர், ராசிபுரத்தில் குடிநீர் பிரச்சினை, பிரதான பிரச்சினையாக இருந்தது. 2021 ஆம் ஆண்டிற்கு முன்னர் 15 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வந்தது.
நம்முடைய ஆட்சியில் சுமார் ரூ.854.37 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது 2 நாட்களுக்கு ஒருமுறை கூட தண்ணீர் வரும்" என பேசியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க