இந்து அல்லாதோர் வீட்டிற்கு சென்றால் கால்களை உடைங்க.. பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு!

BJP Madhya Pradesh
By Sumathi Oct 21, 2025 01:26 PM GMT
Report

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள் என பாஜக பிரபலம் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரக்யா தாக்கூர்

போபாலில் நடந்த ஆன்மிக நிகழ்வில் மத்தியப் பிரதேசத்தின் பாஜக முன்னாள் போபால் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் கலந்துக் கொண்டார்.

pragya thakur

அதில் பேசிய அவர், பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக செயல்படும் பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உமிழ்நீரால் வெள்ளரிக்காயை சுத்தம் செய்த வியாபாரி - அதிர்ச்சி வீடியோ!

உமிழ்நீரால் வெள்ளரிக்காயை சுத்தம் செய்த வியாபாரி - அதிர்ச்சி வீடியோ!

சர்ச்சை பேச்சு

அவர்கள் துண்டு துண்டாக வெட்டப்படுவதில் இருந்து காக்கவே பெற்றோர்கள் அவ்வாறு செய்ய வேண்டும். பெற்றோரின் பேச்சை கேட்காத பெண்கள் வீட்டைவிட்டு ஓட தயாராக இருப்பார்கள், அவர்களை கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்து அல்லாதோர் வீட்டிற்கு சென்றால் கால்களை உடைங்க.. பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு! | Break Daughters Legs Says Bjp Pragya Thakur

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பூபேந்திர குப்தா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.