பெண்கள் மீது ஓங்கப்படும் ஆணின் கைகள் உடைக்கப்படும் - பெண் எம்.பி. பேச்சால் பரபரப்பு

By Petchi Avudaiappan May 17, 2022 11:25 PM GMT
Report

பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆணின் கைகள் உடைக்கப்படும் என்று பெண் எம்.பி. தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்ட்ரா மாநிலம் பாரமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே நேற்று புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர்,  பெண் மீது தாக்குதல் நடத்த மகாராஷ்ட்ராவில் எந்த ஆணாவது தன் கைகளை ஓங்கினால் நானே அங்கு சென்று அந்த ஆண் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன். மேலும் தாக்குதல் நடத்த ஓங்கிய அந்த ஆணின் கைகளை உடைத்து அவரிடமே கொடுத்துவிடுவேன் என தெரிவித்தார். 

பெண் எம்.பியின் கருத்தால் அம்மாநில மக்களிள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.