மீண்டும் மருத்துவமனையில் போல்சொனரோ .. பிரேசிலில் பரபரப்பு!

By Irumporai Jul 16, 2021 09:06 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ மீண்டும் மருத்துவமனையில்ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  பிரேசில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து விட்டது. இதில் அதிபர் ஜெயிர் போல்சொனரோவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார்.

இந்த நிலையில், அதிபர் ஜெயிர் போல்சொனரோ கடந்த 10 நாட்களாக தொடர் விக்கலால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது .

இதனால் சாவ் பாவ்லோ நகரில் உள்ள நோவாஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மருத்துவ பரிசோதனையில் அவரது குடலில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. அதே சமயம் தற்போதைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது போல்சொனரோவுக்கு சிக்கிச்சை அளிக்கப்படு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மருத்துவமனையில் படுக்கையில் படுத்திருக்கும் படத்துடன் ட்விட்டரில் பதிவிட்ட போல்சொனரோ கடவுள் விருப்பப்படி விரைவில் திரும்ப வருவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ திடீரென மருத்துசேர்க்கப்பட்டிருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.