ஓடும் பேருந்தில் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பெண் - வைரல் வீடியோ
பேருந்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இளம்பெண் ஒருவர் தர்ம அடி கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரேசில் நாட்டில் இளம்பெண் ஒருவர் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி உடற்பயிற்சியை முடித்துவிட்டு பேருந்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பேருந்தில் கூட்டமாக இருந்த நிலையில் அதனைப்பயன்படுத்தி இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை சீண்டியுள்ளார்.
அப்பெண் தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் அந்த இளைஞரை கழுத்தோடு இறுகப்பிடித்த பேருந்தில் வைத்து சத்தம்போட்டுள்ளார்.
மேலும் அவர் மூக்கில் குத்துவிட்டவர் அவரை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகளை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலானது.
இதனையடுத்து பேருந்து காவல்நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு அந்த இளைஞர் மீது அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அதேசமயம் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பற்றி கூறிய பெண் பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் யாரும் தனக்கு உதவுவதற்கு முன்வரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.