2 ஆண்குறியுடன் வாழ்ந்து வந்த சிறுவன் - கடைசியில் நடந்த எதிர்பாராத திருப்பம்

By Petchi Avudaiappan Apr 21, 2022 10:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

பிரேசில் நாட்டில் 2 ஆண்குறியுடன் வாழ்ந்து வந்த சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. 

பிரேசில் நாட்டை சேர்ந்த சிறுவன்  2 ஆண்குறியுடன் வாழ்ந்து வந்த நிலையில், சிறிது ஒன்றும், பெரிது ஒன்றுமாக அது இருந்துள்ளது. இதில் சிறியதில் மட்டுமே வழக்கமான செயல்பாடுகள் நடைபெற்ற நிலையில் பெரிய ஆண்குறி போதிய செயல்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. 

முதலில் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில் நாளடைவில் வலி ஏற்பட்டதால் அவனது பெற்றோர் மருத்துவர்களை அணுகியுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் பெரிய ஆண்குறியை நீக்கிவிடலாம் என்ற முடிவு செய்துள்ளனர். ஆனால் அதில் இரத்த நாளங்கள் சென்றதால் இந்த அறுவை சிகிச்சை சாதாரணமான ஒன்றாக அமையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து பல ஆய்வுகள் சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்டு பெரிய ஆண்குறி வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ உலகம் அரிதினும் அரிதாக இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படுவதை டிஃபாலியா என்று அழைக்கிறது.இதுபோன்ற பாதிப்பு  முதல் முறையாக 1609ம் ஆண்டு கண்டறியப்பட்டது. 

இவ்வாறு பிறவி பிரச்னைகளுடன் இருக்கும் குழந்தைகள் 2 ஆண்குறியுடன் வாழலாம். ஆனால் ஒன்றில் ஆரோக்கிய பிரச்சனை காணப்பட்டால் அதனை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஈராக்கில் ஒரு சிறுவனுக்கு இருந்த 3 ஆண்குறிகளில் 2 வெற்றிகரமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.