கல்லறைக்குள் அழுகுரல் - திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
உயிருடன் பெண் ஒருவர் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லறைக்குள் சத்தம்
பிரேசில், மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் உள்ள கல்லறையில் வழக்கம்போல பணியாளர்கள் வழக்கம்போல் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, ஒரு கல்லறை ரத்தம் தோய்ந்து சிமெண்ட் பூச்சு புதிதாக இருந்திருக்கிறது.
இதற்கிடையில் பெண் ஒருவர் அழும் குரலும் கேட்டதையடுத்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின் கல்லறை சுவரை உடைத்து பார்த்ததில் உள்ளே ஒரு பெண்(36) தலையிலும் கைகளிலும் காயங்களோடு இருந்துள்ளார்.
பதறிய ஊழியர்கள்
உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனையடுத்து, விசாரித்ததில் கமூடி அணிந்த இருவர் அந்த பெண்மணியை தாக்கியதாகவும், பின்னர் கல்லறையில் வைத்து மூடியதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 20 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர்.