மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் - என்ன காரணம்?
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெயிர் போல்சனரோவின் வயிற்றில் ஒருவர் கத்தியால் குத்தினார். அந்த சம்பவத்துக்கு பின் அவருக்கு 4 முறை வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதனிடையே போல்சேனரோவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
தொடர்ந்து குடல் அடைப்பு காரணமாக ஜெயிர் போல்சனரோ கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டதாகவும், இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாகவும் அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து ஜெயிர் போல்சனரோ அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கிச்சைக்கு பின் போல்சனரோவின் உடல்நிலை மேம்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.