“வெளியே போ” - தடுப்பூசி போடாததால் பிரேசில் அதிபருக்கு நேர்ந்த கதி
அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் பிரேசில் அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ஐ.நா. சபை கூட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் 193 நாடுகளின் முக்கிய தலைவர்கள் சபையில் பங்கேற்க உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சில தலைவர்கள் காணொலி மூலம் கலந்து கொள்கின்றனர்.
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ளவுள்ளதால் வருகின்ற 23ஆம் தேதி அவர் அமெரிக்கா வருகிறார். இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜயர் போல்சனாரோ கூட்டத்தில் நேற்று முன்தினம் நியூயார்க் நகருக்கு வந்துள்ளார்.
இதனிடையே அவர் பீட்சா சாப்பிட விரும்பிய நிலையில் ஒரு உணவகத்தினுள் சென்றுள்ளார். அந்நாட்டில் தடுப்பூசி போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க எந்த தடையும் இல்லை என்றாலும் நியூயார்க் நகரில் உள்ள உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது அவசியம்.
அதன்படி அவர் தடுப்பு ஊசி செலுத்தி விட்டாரா என்று சோதனை செய்யப்பட்டதில் இல்லை என தெரிய வந்தது. இதனால் அவர் உணவகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனையடுத்து அவர் சாலையிலேயே நின்று பீட்சா சாப்பிட்டார்.
இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனக்கு நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் கொரோனாவை எதிர்த்துப் போராடும் அளவுக்கு வலிமையானது என்பதால் தான் தடுப்பூசி செலுத்தவில்லை என பிரேசில் அதிபர் விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.